அயோத்தி நிலம் தொடர்பான வழக்கு : அடுத்தகட்ட விசாரணை பிப்.8-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

டிசம்பர் 05

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்குச் சொந்தம்? என்பது தொடர்பான வழக்கில் அடுத்த கட்ட விசாரணை பிப்ரவரி மாதம் 8-ம் தேதி நடைபெறும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம் யாருக்குச் சொந்தமானது என்பது குறித்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், 2010-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. அதில், 2.77 ஏக்கர் நிலத்தின் ஒரு பகுதியை நிர்மோகி அகாராவுக்கும், மற்றொரு பகுதி ராமர் கோவில் கட்டவும், எஞ்சிய பகுதி முஸ்லிம்களின் சன்னி வக்பு வாரியத்துக்கும் சொந்தம் எனத் தீர்ப்பளித்தது. 

இந்தத் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மூன்று தரப்பினரும் மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விரைவாக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான சிறப்பு அரசியலமைப்பு அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

இவ்வழக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ராமஜென்மபூமி-பாபர் மசூதி நில பிரச்சனை தொடர்பான ஆவணங்களின் மொழிபெயர்ப்பு பணிகளை மூன்று தரப்பினரும் 12 வாரங்களுக்குள் (மூன்று மாதம்) முடிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், அலகாபாத் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட ஆதாரங்களை 10 வாரங்களுக்குள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும்படி உத்தரப்பிரதேசம் மாநில அரசுக்கு உத்தரவிடப்பட்டது. இந்த மொழிபெயர்ப்பு பணி முடிந்து டிசம்பர் 5-ம் தேதியில் இருந்து இறுதிக்கட்ட வாதம் நடைபெறும் என்று கூறிய நீதிபதிகள், எந்தச் சூழ்நிலையிலும் விசாரணை ஒத்திவைக்கப்பட மாட்டாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, சுமார் 19,590 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை அரசு சொசிலிட்டர் ஜெனரல் தாக்கல் செய்தார். சன்னி வக்பு வாரியம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், குறுகிய காலகட்டத்தில் இத்தனை பக்க ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது எப்படி என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், 2019-ம் ஆண்டு ஜூலை மாதத்திற்கு பிறகே இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என கபில் சிபில் தனது வாதத்தில் கூறினார். ஆனால், இதற்கு உத்தரபிரதேச அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். தினமும் விசாரணை நடத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். தற்போது, மூன்று நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கை விசாரித்து வரும் நிலையில், பெரிய நீதிமன்ற அமர்வு, அதாவது குறைந்தது 7 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்க வேண்டும் என கபில் சிபில், ராஜிவ் தாவான் மற்றும் மற்ற மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கூறினர்.

வாதங்கள் முடிவடைந்த நிலையில், இது தொடர்பான அடுத்த கட்ட விசாரணை அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 8-ம் தேதி நடைபெறும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...