”தமிழகம், புதுச்சேரி மீனவர்கள் 8-ம் தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்”

டிசம்பர் 05

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று வருவதால், இன்று முதல் 4 நாட்களுக்குத் தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக, சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் பேட்டி அளிக்கையில், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்றும் அதே பகுதியில் நிலவுகிறது. அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். மேலும், இது வடமேற்கு திசையில், வடக்கு தமிழகம், தெற்கு ஆந்திரா கரையை நோக்கி நகரக்கூடும். இதனால், மீனவர்கள் இன்று முதல் 8-ம் தேதி வரை கடலுக்குள் செல்ல வேண்டாம். ஆழ்கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் கரை திரும்ப வேண்டும்.

இன்றும், நாளையும் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். கனமழைக்கு வாய்ப்பு இல்லை. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாகத் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ஒரு செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...