2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கு : டிச., 21-ம் தேதி தீர்ப்பை அறிவிக்கிறது டெல்லி சிபிஐ நீதிமன்றம்


டிசம்பர் 05

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக எழுந்த வழக்கில் வரும் 21-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2ஜி ஸ்பெக்ட்ரம் எனப்படும் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாகப் புகார் கூறப்பட்டது. இதுதொடர்பாக, முன்னாள் தொலை தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்பி கனிமொழி மற்றும் சில நிறுவன நிர்வாகிகள் மீது குற்றம்சாட்டப்பட்டது.

இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த சிபிஐ விசாரணை நடத்தி வந்தது. இந்த வழக்கு டெல்லி பாட்டியாலா ஹவுஸ் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தீர்ப்பு தேதி எப்போது என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், மூன்று முறை இதற்கான அறிவிப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, வரும் 21-ம் தேதி காலை 10.30 மணிக்குத் தீர்ப்பு விபரங்கள் அறிவிக்கப்படும் என்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி சைனி அறிவித்துள்ளார். இதனையடுத்து, நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த திமுக எம்பி கனிமொழியிடம் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, ‘பார்க்கலாம்’ என்று பதிலளித்தார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சுப்பிரமணிய சுவாமி, தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சி. நிச்சயம் குற்றவாளிகள் சிறைக்குச் செல்வார்கள். நாட்டிற்கு ஆதரவாகவே தீர்ப்பு வரும் என்று கூறியுள்ளார். தீர்ப்பு வெளியாகும் தேதியன்று ஆர்.கே நகர் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...