தொப்பி சின்னம் கோரிய வழக்கு : டிடிவி தினகரனின் மனுவைத் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

டிசம்பர் 04 

தினகரனுக்குத் தொப்பி சின்னம் ஒதுக்குவது குறித்து தேர்தல் ஆணையமே முடிவு செய்யும் எனக் கூறி அவரது மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சென்னை ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் கடந்த முறை டிடிவி தினகரன் தொப்பி சின்னத்தில் போட்டியிட்டார். இந்த முறையும் தொப்பி சின்னத்தில் தான் போட்டியிடுவேன் என்று அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார். ஆனால், சுயேட்சையாக போட்டியிட வேட்புமனுத்தாக்கல் அளித்தவர்கள் பலரும் தொப்பி சின்னம் வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர். ஒரே சின்னத்தை பலரும் கேட்டால் குலுக்கல் முறையில் அந்தச் சின்னம் ஒதுக்கப்படும். எனவே, சுயேச்சை வேட்பாளராகக் களம் இறங்கி உள்ள டிடிவி தினகரனுக்கு தொப்பி சின்னம் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

இந்த நிலையில், டிடிவி தினகரன் தனக்குத் தொப்பி சின்னத்தை ஒதுக்க, தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை மாலை 4 மணிக்குத் தள்ளி வைத்தார். பின்னர், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தொப்பி சின்னத்தை ஒதுக்க, தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரிய தினகரனின் கோரிக்கையை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்தது. தொப்பி சின்னம் ஒதுக்குவது குறித்து தேர்தல் ஆணையமே முடிவு செய்யும் எனவும் கூறியுள்ளது. 

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...