காங்கிரஸ் கட்சித் தலைவராக போட்டியின்றி தேர்வாகிறார் ராகுல் காந்தி

டிசம்பர் 4

காங்கிரஸ் தலைவர் பதவிக்குத் துணைத்தலைவர் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் கட்சியின் தலைவராக, அவர் போட்டியின்றி தேர்வாகிறார். 

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தொடர்ந்து உடல்நலக்குறைவால் பாதிக்கப்படுவதால், கட்சியின் நலன் கருதி ராகுல் காந்தியை தலைவராக நியமிக்க வேண்டும் என மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்தக் கோரிக்கை தொடர்பாக முதலில் அமைதி காத்து வந்த சோனியா, நாளடைவில் தலைவராக ராகுலை நியமிக்க வேண்டும் எனத் தீர்மானித்தார். 

இதற்காக, கட்சியின் புதிய தலைவரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி, காங்கிரஸ் தலைவர் தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். துணைத்தலைவராக இருக்கும் ராகுல்காந்தி வேட்பு மனுதாக்கல் செய்தார். நாளை வேட்பு மனு பரிசீலனை செய்யப்படும். காங்கிரஸ் தலைவர் தேர்தல் வேட்பாளர் நாளை அறிவிக்கப்படும். வேட்பு மனு வாபஸ் பெறக் கடைசி நாள் டிசம்பர் 11-ந் தேதியாகும். டிசம்பர் 16-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். டிசம்பர் 19 ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும். 

எந்தப் போட்டியும் இல்லை என்றால் ராகுல் காந்தி டிசம்பர் 11-ந் தேதி காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்து எடுக்கப்படுவார். முன்னதாக ஜன்பாத்தில் உள்ள சோனியாகாந்தி இல்லத்திற்குச் சென்று அவரிடம் ஆசி பெற்றார். பின்னர், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து ஆசி பெற்றார். காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்கள் ராகுல் காந்தியின் பெயரை முன்மொழிந்தனர். தொடர்ந்து, மாநில தலைவர்கள் வழிமொழிந்தனர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாப், மூத்த காங்கிரஸ் தலைவர் ஏ.கே. அந்தோனி ஆகியோர் ராகுல் காந்தியின் பெயரை முன்மொழிந்தனர். நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மோசினா கிதவாய், ஷீலா தீட்சித், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோர்  கலந்து கொண்டனர்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...