கால்நடைகளை விற்பதற்கு விதிக்கப்பட்ட தடைச் சட்டம் வாபஸ்

டிசம்பர் 2

பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், இறைச்சிக்காகப் பசு உள்ளிட்ட கால்நடைகளை விற்பதற்கு விதிக்கப்பட்ட தடையை மத்திய அரசு திரும்ப பெற்றது.

இறைச்சிக்காகப் பசு உள்ளிட்ட கால்நடைகளை விற்பதற்குத் தடை விதிக்கும் அரசாணையைக் கடந்த மே மாதம் மத்திய அரசு பிறப்பித்தது. இதற்கு, பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. மத ரீதியில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் விமர்சனங்கள் செய்யப்பட்டன. இந்த அரசாணைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. அதை எதிர்க்கும் வழக்கும், உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

 

பசு உள்ளிட்ட கால்நடைகளை, இறைச்சிக்காக விற்பது குறித்து மக்களிடம் இருந்து கருத்து கேட்கப்பட்டு உள்ளதாகவும், அதில், இந்தத் தடைச் சட்டத்திற்கு எதிர்ப்பு இருந்தால், அதைத் திரும்பப் பெறவும் தயாராக உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில், நாடு முழுவதும் பசுவதையைக் கண்டித்து பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் நடந்ததைத் தொடர்ந்து, இந்தத் தடை சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற்றுக் கொண்டது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...