குமரி, நெல்லை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச.,01) விடுமுறை

நவம்பர் 30 

தொடர் மழைக் காரணமாக கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் செயல்பட்டு வரும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (டிச.,01) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

கன்னியாகுமரி அருகே வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியிருப்பதால், கன்னியாகுமரி மற்றும் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கன்னியாகுமரியில் சூறைக் காற்றுடன் கன மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 

சாலைகளில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்துள்ளன. மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. போக்குவரத்து சேவையும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

இதேபோல, கனமழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவித்திருப்பதாவது. ஒகி புயல் காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனையடுத்து, நெல்லை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக உத்தரவில் தெரிவித்துள்ளார். 

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...