நீலகிரியில் தொடர் மழை : பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு


நவம்பர் 30 

ஒகி புயல் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

இரு தினங்களுக்கு முன்பு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையானது, தற்போது வலுப்பெற்றுள்ளதால் புயலாக மாறியுள்ளது. இதன் காரணமாக, நேற்று நள்ளிரவு முதல் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. குன்னூர் வெலிங்டன், அருவங்காடு, சிம்ஸ்பார்க், காட்டேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. காற்று வேகமாக வீசியதால், ஒருசில இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால், கிராமங்கள் இருளில் மூழ்கின . அதிகாரிகளின் உத்தரவின் பேரில் ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு, மின்சேவையை சீர்செய்தனர். 



மேலும், பல்வேறு இடங்களில் மரங்கள் சாலைகளில் சரிந்து விழுந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர் மழையின் காரணமாக, உதகை அரசு தாவிரவியல் பூங்காவில் இருந்த மிகவும் பழமையான மரம் வேரோடு விழுந்தது. இதனை மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். 

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...