உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து செவிலியர்கள் போராட்டம் வாபஸ்

நவம்பர் 29

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் நடத்தி வந்த போராட்டம் கைவிடப்பட்டது. 

பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் டிஎம்எஸ் வளாகத்திற்குள் கடந்த இரண்டு நாட்களாகப் போராட்டம் நடத்தி வந்தனர். செவிலியர்களின் பிரதிநிகளுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து ஒருதரப்பினர் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். 

இருப்பினும், அமைச்சரின் உத்தரவை அரசாணையாக வெளியிட வலியுறுத்தி மற்றொரு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் போராட்டத்தை எதிர்த்துத் தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவில், செவிலியர் போராட்டத்திற்குத் தடை விதித்ததுடன், செவிலியர்கள் போராட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும். உங்களின் போராட்டம் தேவையற்ற ஒன்று. அனைத்துக் கோரிக்கைகளுக்கும் செவிலியர்கள் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண வேண்டும். அரசு மருத்துவமனையை ஏழை, நடுத்தர மக்கள்தான் நாடுகின்றனர். சம்பளம் போதவில்லை என்றால் வேலையை விடுங்கள். உங்களது போராட்டத்தால் அத்தியாவசியப் பணிகள் பாதிக்கப்படக்கூடாது.

போராட்டத்தைக் கைவிடாவிட்டால், உங்களது தரப்பு வாதத்தைக் கேட்க மாட்டோம். நாளைப் பணி நேரத்தில் பணியில் இருக்க வேண்டும். உத்தரவை மீறி போராட்டம் நடத்தினால், அது சட்டவிரோதம். அவர்கள் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு உள்ளாவார்கள். போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது. இவ்வாறு உத்தரவிடப்பட்டது. 

இதைத்தொடர்ந்து, அதிகாரிகள் செவிலியர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனையடுத்து, விரைவில் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் போராட்டத்தை கைவிடுவதாகச் செவிலியர்கள் அறிவித்தனர்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...