தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாதத்திற்குள் மூட உத்தரவு

நவம்பர் 29

தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் இன்று முதல் 6 மாதங்களுக்குள் மூட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலைக் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன் பிறப்பித்த உத்தரவில், மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலைக் கொண்டு செல்ல அனுமதிக்கலாம். தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளை இன்று முதல் 6 மாதங்களுக்குள் முழுவதுமாக மூட வேண்டும். புதிதாக எந்த மணல் குவாரிகளையும் திறக்க கூடாது. தமிழகத்தின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக மணல் எடுத்துச் செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணல் மூலம், தமிழகத்தின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். மணல் இறக்குமதிக்கான விதிமுறைகளை வகுக்க வேண்டும். சோதனைச் சாவடிகள் வழியாகச் செல்லும் வாகனங்களை கண்காணிப்புக் கேமரா பொருத்தி மணல் கடத்தல் குறித்துக் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...