இரட்டை இலை விவகாரம்: ஓபிஎஸ், இபிஎஸ் சார்பில் கேவியட் மனுத் தாக்கல்

நவம்பர் 27

இரட்டை இலை விவகாரத்தில் தங்கள் தரப்பு கருத்தை கேட்காமல் எந்தவித உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என வலியுறுத்தி தில்லி உயர்நீதிமன்றத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

இரட்டை இலைச் சின்னம் மற்றும் கட்சியின் பெயரைப் பயன்படுத்திக் கொள்ளும் உரிமையையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணிக்கு வழங்குவதாக தேர்தல் ஆணையம் கடந்த வாரம் அறிவித்தது. இதனால், தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு செய்ய உள்ளதாக தினகரன் கூறியிருந்தார்.

இதனையடுத்து, இரட்டை இலை சின்னத்திற்கு தடை கோரி தினகரனோ அல்லது வேறு யாரோ வழக்கு தொடர்ந்தால், இந்த விவகாரத்தில் தங்கள் தரப்பு கருத்தை கேட்காமல் உத்தரவு ஏதும் பிறப்பிக்கக் கூடாது என உச்சநீதிமன்றத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இரட்டை இலை சின்னம் தொடர்பாக தினகரன் தரப்பில் இன்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தில்லி உயர்நீதிமன்றத்தில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில் தனித்தனியாக கேவியட் மனு இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இரட்டை இலை விவகாரத்தில் தினகரன் தரப்பு மேல்முறையீடு செய்தால் தங்களை கேட்காமல் உத்தரவு ஏதும் பிறப்பிக்கக் கூடாது என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...