பிறப்பு, இறப்புச் சான்று பெறக் கட்டணம் அதிரடி உயர்வு - பொதுமக்கள் கடும் அதிருப்தி

சென்னை : தமிழகத்தில் பிறப்பு, இறப்புச் சான்றிதழ்கள் பெறுவதற்கான கட்டணம் 50 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். 

தமிழகத்தில் பிறப்பு இறப்புச் சான்றிதழ்கள் உள்ளாட்சி அமைப்புகள், சுகாதார ஆய்வாளர் அலுவலகம், வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், பத்திர பதிவு அலுவலகங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த சான்றிதழ் பெறுவதற்கு ஒவ்வொரு நிலைக்கும் ஒரு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

குறிப்பாக இரண்டு ரூபாய் முதல் 10 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. கட்டணம் குறைவாக இருந்ததால் அதைப் பொது மக்கள் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை. எனினும் சில இடங்களில் சான்றிதழ் பெறுவதற்காக பணம் அதிகமாக கேட்பதாக புகார்கள் எழுந்துள்ளன. 

இந்நிலையில் கட்டண விபரத்தை மாற்றியமைத்து தமிழக அரசு சுகாதார துறை ஆணை வெளியிட்டுள்ளது. இந்த ஆணை சில இடங்களில் முன் தேதியிட்டு அமல் செய்யப்பட்டுள்ளது. 

பத்திரப் பதிவுத்துறை அலுவலகங்களில் கடந்த மாதம் 26ம் தேதியிட்டு அமல் செய்யப்பட்டுள்ளது. நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகள் தவிர்த்து பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் பிறப்பு, இறப்புப் பதிவு செய்ய அந்தந்த பிறப்பு இறப்பு அலுவலர் அலுவலகத்தில் பதிவு செய்து சான்றிதழ் பெற வேண்டும். இறப்போ, பிறப்போ முதல் ஒரு வருடம் மட்டுமே இங்கு சான்றிதழ் பெற இயலும். 

அடுத்த இரண்டு ஆண்டுக்கான சான்றிதழ்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் கிடைக்கும். மூன்று ஆண்டுகளை கடந்த சான்றிதழ்கள் சார்பதிவாளர் அலுவலகத்தில் வாங்க வேண்டும். ஆனால் நகராட்சி, மாநகராட்சியில் இது போன்ற அலைச்சல் கிடையாது. ஒரே இடத்தில் வாங்கிக் கொள்ளலாம். இதனிடையே ஆன்லைன் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் சான்றிதழுக்கான கட்டணங்கள் தாறுமாறாக உயர்த்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதற்கு முன் இருந்த 2 ரூபாய் கட்டணம் 100 ஆகவும், 5 ரூபாய் கட்டணம் 200 ஆகவும், 10 ரூபாய் கட்டணம் 500 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெறுவதற்கு 200 ரூபாய், கூடுதல் நகல் பெற ஒவ்வொரு நகலுக்கும் தலா 200 ரூபாய் கொடுக்க வேண்டியுள்ளது. 

பதிவு அலுவலகத்தில் தேடுதல் கட்டணமாக ஒரு வருடத்துக்குட்பட்டது ரூ.100, கூடுதல் ஒவ்வொரு ஆண்டுக்கு ரூ.100, சான்று ஒன்றுக்கு ரூ.200, கூடுதல் சான்று ஒன்றுக்கு ரூ.200, பதிவில்லா சான்று ஆண்டு ஒன்றுக்கு ரூ.2ல் இருந்து 100 என பதிவு அலுவலகத்தில் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இது போன்று நகராட்சி பகுதிகளிலும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வால் பொது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...