அதிமுக ஆட்சி மன்றக்குழு நாளை கூடுகிறது - ஆர்கே நகர் தேர்தலுக்கான வேட்பாளர் அறிவிப்பு ?

நவம்பர் 26

அதிமுக தலைமை அலுவலகத்தில் நாளை காலை 11 மணிக்கு ஆட்சி மன்றக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில், ஆர்கே நகர் இடைத்தேர்தலுக்கான வேட்பாளரை இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆர்கே நகர் தொகுதியில் டிசம்பர் 21-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அடங்கிய ஒருங்கிணைந்த அ.தி.மு.க. அணிக்கு தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னம் வழங்கியது.

எனவே, இந்தத் தேர்தலில் ஒருங்கிணைந்த அணி, அதிமுக என்ற பெயரில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறது. இந்த நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் நாளை காலை 11 மணிக்கு ஆட்சி மன்றக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள், எம்எல்க்கள், எம்பிக்கள் ஆகியோருக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் கட்சி வேட்பாளர் பற்றி இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் எனத் தெரிய வருகிறது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...