வங்கி மோசடியில் ஈடுபட்ட மல்லையாவுக்கு மும்பை சிறை ரெடி - மத்திய அரசு தகவல்

நவம்பர் 26

லண்டனிலிருந்து இந்தியாவிற்கு தொழில் அதிபர் மல்லையா நாடு கடத்தப்பட்டால், அவரை மும்பை ஆர்தர் சாலையில் இருக்கும் சிறையில் அடைக்க இருப்பதாக பிரிட்டன் நீதிமன்றத்தில் தெரிவிக்க உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.

கர்நாடகாவைச் சேர்ந்த தொழிலதிபர் விஜய் மல்லையா, கிங்பிஷர் விமானசேவை நிறுவனம் துவங்க பல்வேறு வங்கிகளில் சுமார் ரூ.9,000 கோடி கடன் வாங்கித் திருப்பிச் செலுத்தவில்லை. அவருக்கு எதிராக நாட்டில் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் வங்கிகள் வழக்கு தொடர்ந்தன. கைது செய்யப்படும் சூழ்நிலை ஏற்பட்டதும், விஜய் மல்லையா பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு தப்பியோடி தலைமறைவானார். 

மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தக்கோரி மத்திய அரசு தரப்பில், பிரிட்டன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. லண்டன் நீதிமன்றம், பல்வேறு நிபந்தனைகளுடன், அவருக்கு ஜாமின் வழங்கியுள்ளது. அவரை நாடு கடத்தக்கோரும் மனு மீதான விசாரணை லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வரும் டிசம்பர் 4-ம் தேதி துவங்க உள்ளது. முன்னதாக, நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின் போது, மல்லையா நாடு கடத்தப்பட்டால், அவரது உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும், இந்திய சிறைகளில் மனித உரிமை மீறல்கள் அதிகளவு நடப்பதாகவும் அவரது வழக்கறிஞர் வாதிட்டார்.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது: மல்லையா நாடு கடத்தப்படுவது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வரும் போது மல்லையா நாடு கடத்தப்பட்டால், மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள ஆர்தர் சிறையில் அடைக்கும் திட்டம் உள்ளது. சிறையில் அடைக்கப்படும் நபர்களை பாதுகாப்பது மாநில அரசின் கடமையாகும். தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக மல்லையா கூறுவது தவறான தகவல். 

இந்திய சிறைகள், மற்ற நாடுகளில் உள்ள சிறைகளை விட சிறந்தது. சிறை கைதிகளின் உரிமைகளும் முழு அளவில் பாதுகாக்கப்படுகிறது. மும்பை சிறையில், கைதிகளுக்கு சிறந்த மருத்துவ வசதிகள் உள்ளன. முழு பாதுகாப்புடன் மல்லையா அங்கு இருப்பார். இந்தியாவில் நடக்கும் வழக்குகளில் இருந்து தப்பிக்கவே உயிருக்கு ஆபத்து, மனித உரிமை மீறல் என மல்லையா பொய் சொல்கிறார் என பிரிட்டன் நீதிமன்றத்தில் தெரிவிக்க உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...