நீதிமன்றம் அனுமதி இல்லாமல் சசிகலாவை விசாரிக்க முடியாது - வருமானவரித் துறைக்கு சிறை அதிகாரி கடிதம்

நவம்பர் 26

சொத்துகுவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவை, நீதிமன்ற அனுமதி இல்லாமல் விசாரிக்க அனுமதிக்க முடியாது என வருமானவரி துறைக்கு சிறை அதிகாரி கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சசிகலாவின் உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். ஜெயா டிவி அலுவலகம், ஜாஸ் சினிமாஸ், நமது எம்ஜிஆர் உள்பட பல நிறுவனங்களில் தொடர்ந்து 5 நாட்கள் நடந்த சோதனையின் போது முக்கிய ஆவணங்கள் சிக்கியது. ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில், ஜெயலலிதா, சசிகலா ஆகியோரின் சொத்து தொடர்பான முக்கிய ஆவணங்கள், பென்டிரைவ், லேப்-டாப் ஆகியவை சிக்கின.

இதுதொடர்பாக, சசிகலாவின் உறவினர்களான விவேக், கிருஷ்ணபிரியா, ‌ஷகிலா ஆகியோரிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது ஜெயா டிவி, ஜாஸ் சினிமாஸ், நமது எம்ஜிஆர் ஆகிய நிறுவனங்களில் 2015-ம் ஆண்டுக்கு பிறகே நாங்கள் நிர்வாகிகளாக பொறுப்பேற்றுக் கொண்டோம். அதற்கு முன்பு என்ன நடந்தது என்று எங்களுக்குத் தெரியாது, என்று பதில் அளித்தனர். 

இதையடுத்து. 2015-ம் ஆண்டுக்கு முன்பு இந்த நிறுவனங்களை நிர்வகித்து வந்த சசிகலா, இளவரசியிடம் விசாரணை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் எனக் கோரி பெங்களூரு சிறை அதிகாரி சோமசேகருக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் கடிதம் அனுப்பினர். 

சசிகலாவிடம் விசாரிக்க எந்த நேரத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் பெங்களூரு சிறைக்கு வருவார்கள் என்று தகவல் வெளியானது. இதுதொடர்பாக சசிகலாவை அவரது வழக்கறிஞர் சந்தித்து பேசினார்.

இந்த நிலையில் சிறை அதிகாரி சோமசேகர் சென்னையில் உள்ள வருமானவரித்துறை மண்டல இயக்குநருக்கு பதில் கடிதம் அனுப்பி உள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:- சசிகலாவும், இளவரசியும் குற்ற வழக்கில் உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். கைதிகளிடம் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வேண்டும். நீதிமன்ற அனுமதி இல்லாமல் விசாரணை நடத்த அனுமதிக்க முடியாது. 

கர்நாடக மாநில சிறை விதிகளின்படி நீதிமன்ற உத்தரவு இருந்தால் மட்டுமே வருமானவரித்துறை விசாரணைக்கேற்ற நாள், இடம் ஆகியவற்றை ஒதுக்கித் தர முடியும். அரசு துறைரீதியான கடிதம் மட்டுமே அதற்கு போதுமானது அல்ல. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், சசிகலாவிடம் விசாரணை நடத்துவதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வருமான வரித்துறை அதிகாரிகள் சசிகலா மற்றும் இளவரசியிடம் விசாரணை நடத்துவதற்கு அனுமதிக்கக்கோரி பெங்களூரு மாநகர நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர். இன்னும் ஓரிரு நாளில் இதுதொடர்பாக மனுதாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர். நீதிமன்றம் அனுமதி கொடுக்கும்பட்சத்தில் சசிகலாவிடம் விசாரணை நடத்த அவர்கள் முடிவு செய்துள்ளனர். இதனால் சசிகலாவிடம் விசாரணை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...