நல்லவர்களுடன் கூட்டணி அமைப்பேன் - நடிகர் கமல்ஹாசன் அறிவிப்பு


நவம்பர் 26

அரசியலில் யாரும் தீண்டத்தகாதவர்கள் இல்லை என்றும், ஆகையால், நல்லவர்களுடன் கூட்டணி அமைப்பேன் என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

தில்லியில் சனிக்கிழமை நடந்த விழா ஒன்றில் அவர் பேசுகையில், நான் அரசியலுக்கு வரக் காரணமே எங்கும் மலிந்து கிடக்கும் ஊழலைத் துடைத்து எறிய வேண்டும் என்பதுதான். தமிழக மக்களின் நலனுக்காகவும், வளர்ச்சிக்காவும் நான் அரசியலில் ஈடுபடுகிறேன். அரசியலில் என்னை முன்னிலைப்படுத்த விரும்பவில்லை. மாற்றத்தை முன்னிலைப்படுத்த விரும்புகிறேன். மாற்றத்தை விரும்புபவர்கள் என் பக்கம் வந்து நிற்பார்கள். அரசியல் என்பது பணம் சம்பாதிக்கும் தொழிலோ, சினிமா தயாரிப்பு போன்ற தொழிலோ அல்ல. அதனால் அரசியலில் தோல்வி பற்றி எனக்கு எந்த பயமும் கிடையாது.

விரைவில் என்னுடைய அரசியல் கட்சியின் பெயரையும், கொள்கையையும் வெளியிடுவேன். சித்தாந்தங்களின் அடிப்படையில் பாஜக மற்றும் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க மாட்டேன். மக்களுக்கு எது தேவையோ அதுவே என்னுடைய தேவை. ஆகையால், தமிழகத்தின் நலன் கருதி யாருடன் வேண்டுமானால் கூட்டணி வைக்கலாம். அரசியலில் யாரும் தீண்டத்தகாதவர்கள் இல்லை. எந்த வகையிலான தீவிரவாதமானாலும், அதை நிச்சயம் ஆதரிக்கப்போவதில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...