ஆர்கே நகர் இடைத்தேர்தலுக்கு 9 பேர் கொண்ட பார்வையாளர்கள் குழு நியமனம்


நவம்பர் 26

ஆர்கே நகர் இடைத்தேர்தலுக்காக 9 பார்வையாளர்கள் கொண்ட குழுவை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. அந்தக் குழு வரும் 4-ம் தேதி தமிழகம் வருகிறது.

ஆர்கே நகர் தொகுதியில் டிசம்பர் 21-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக இரட்டை இலை சின்னம் தங்களுக்கு கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி தேர்தல் ஆணையத்தில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான அணியினர் கோரியிருந்தனர்.

இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அடங்கிய ஒருங்கிணைந்த அதிமுக அணிக்கு தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னம் வழங்கியது. எனவே, இந்த தேர்தலில் ஒருங்கிணைந்த அணி, அதிமுக என்ற பெயரில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறது. இதேபோல, டிடிவி தினகரன் மீண்டும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். மேலும், திமுக உள்ளிட்ட கட்சிகளும் போட்டியிடுகின்றன. இதனால், ஆர்கே நகர் இடைத்தேர்தலில் கடும் போட்டி நடப்பதற்கு சூழல் உருவாகியுள்ளது.

இந்த நிலையில், பொது பார்வையாளர்கள், செலவினம், காவல் பார்வையாளர்கள் ஆகியோர் அடங்கிய 9 பேர் கொண்ட பார்வையாளர்கள் குழுவை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. இந்தக் குழு வருகிற டிசம்பர் 4-ம் தேதி தமிழகம் வருகிறது. நாளை வேட்பு மனு தாக்கல் தொடங்கவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வேட்பு மனுத் தாக்கல் முடிவடைந்த பின் பார்வையாளர்கள் தங்கள் பணிகளை தொடங்குவார்கள். தேவைக்கேற்ப வாக்குப்பதிவு நெருங்கும் தேதியில் கூடுதல் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...