ஜெயலலிதா கைரேகை வழக்கு: பெங்களூர் சிறை கண்காணிப்பாளர் ஆஜராகச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு


கோவை, நவம்பர் 24

தேர்தல் ஆணையப் படிவங்களில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கைரேகை வைத்தது தொடர்பான வழக்கில் பெங்களூர் சிறை கண்காணிப்பாளர், ஆவணங்களுடன் ஆஜராக வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த ஆண்டு திருப்பரங்குன்றம் தொகுதிக்கு நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். அவரது வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக சார்பில் போட்டியிட்ட சரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

சரவணன் தாக்கல் செய்திருந்த மனுவில், ஜெயலலிதா சுயநினைவின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அதிமுக வேட்பாளருக்கு இரட்டைஇலை சின்னம் ஒதுக்கக்கோரி இடதுகை பெருவிரல் ரேகையைத் தேர்தல் ஆவணப் படிவத்தில் வைத்துள்ளார். ஜெயலலிதா சுயநினைவோடு தான் இதில் கைரேகை வைத்தாரா? என்பது சந்தேகமாக உள்ளது. எனவே மருத்துவ ஆவணங்களைச் சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் என அதில் கோரியிருந்தார். 

இது குறித்து விளக்கமளிக்கத் தேர்தல் ஆணைய அதிகாரி நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன் அடிப்படையில் கடந்த மாதம் 13-ம் தேதி மத்திய தேர்தல் ஆணைய முதன்மைச் செயலர் வில்போர்டு ஆஜராகி விளக்கம் அளித்தார். 

அப்போது, அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் ஒப்புதல் அளித்திருந்ததால் அதன் பெயரிலேயே விண்ணப்பம் ஏற்கப்பட்டதாக அவர் நீதிமன்றத்தில் கூறியிருந்தார். இதனையடுத்து, ஜெயலலிதா கைரேகை வைத்ததாகச் சான்றளித்த மருத்துவர் பாலாஜி ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

அதன்படி, மருத்துவர் பாலாஜி கடந்த மாதம் 27-ம் தேதி ஆஜரானார். அப்போது, அவரிடம் கைரேகை தொடர்பாக மனுதாரரின் வழக்கறிஞர் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அதற்குப் பதிலளித்த மருத்துவர், இரண்டாவது முறையாகக் கடந்த 3-ம் தேதி ஆஜராகி விளக்கமளித்தார். இதனிடையே, ஜெயலலிதா மரணம் தொடர்பாக அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகச்சாமி ஆணையத்தில், மேற்கண்ட வழக்கைத் தாக்கல் செய்த சரவணன் ஆஜராகி சில கேள்விகளை முன்வைத்தார். 

இந்நிலையில், ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட கைரேகை உள்ளிட்ட ஆவணங்களுடன் சிறை கண்காணிப்பாளர் நேரில் ஆஜராக வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...