டிச.,15-க்குள் ஆர்கே நகர் இடைத்தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டம்

நவம்பர் 22:

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னதாகவே ஆர்கே நகர் இடைத்தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்காகத் தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி விரைவில் தில்லி செல்ல உள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, ஆர்கே நகர் சட்டசபை தொகுதி காலியானது. இந்த தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு, தி.மு.க., à®….தி.மு.க., சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். தேர்தல் பிரசாரத்தின் போது எழுந்த பணம் பட்டுவாடா புகாரால், தேர்தல் ரத்தானது. 

இதையடுத்து, ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்பதால், அதன்படி, தேர்தல் நடத்தக் கோரி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய அமர்வு, வரும் டிசம்பருக்குள் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்திருந்தது. இதனிடையே, போலி வாக்காளர்களை நீக்க கோரிய திமுக தொடர்ந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, ஆர்கே நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலை, டிசம்பருக்குள் நடத்தும்படி தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன் ஆர்கே நகர் இடைத்தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. தேர்தல் தேதியை இறுதி செய்ய 2 நாளில் தமிழகத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தில்லி செல்ல உள்ளார். அப்போது, தலைமை தேர்தல் ஆணையருடன் நடக்கும் ஆலோசனைக்கு பிறகு, விரைவில் தேர்தல் நடக்கும் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ளும் இயந்திரம் தேர்தலின் போது பயன்படுத்தப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...