ஆர்கே நகர் இடைத்தேர்தலை டிச., 31-க்குள் நடத்த வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் ஆணை

நவம்பர் 21:

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகரில் வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு, சென்னை உயர்நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. 

போலி வாக்காளர்களை நீக்காமல் ஆர்கே நகர் இடைத்தேர்தலை நடத்தக்கூடாது என திமுகவின் ஆர்எஸ் பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆர்கே நகரில் 45 ஆயிரம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக அறிக்கை தாக்கல் செய்தது. மேலும், நீக்கப்பட்ட போலி வாக்காளர்கள் குறித்த விவரம் நாளை இணையதளத்தில் வெளியிடப்படும் என உத்தரவாதம் அளித்தது.

இதனிடையே, திமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன், 50, 100 வாக்குகள் கூட வெற்றியை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் ஏன்றும்,  ராதாபுரம் தொகுதியில் 42 வாக்குகள்தான் வெற்றியை தீர்மானித்தது என வாதிட்டார். இதனைக்கேட்ட நீதிபதிகள், டிசம்பர் மாதம் 31-ம் தேதிக்குள் ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு கெடு விதித்தனர். 

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...