2017 -ம் ஆண்டிற்கான உலக அழகியாக இந்தியாவின் மனுஷி சில்லர் தேர்வு


நவம்பர் 19: இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி 2017 போட்டியில் மகுடம் சூடினார்.

சீனாவில் உள்ள சான்யா நகரில் இந்த ஆண்டுக்கான 67-வது உலக அழகி போட்டி நடைபெற்றது. பல சுற்றுகளாக நடைபெற்ற இந்த போட்டியின் இறுதிச் சுற்றில் இங்கிலாந்து, பிரான்ஸ், கென்யா, மெக்சிகோ, இந்தியா ஆகிய நாடுகளை சேர்ந்த 5 பெண்கள் இடம் பெற்றிருந்தனர்.

இன்று நடைபெற்ற இறுதிச் சுற்றில் இந்தியாவை சேர்ந்த மனுஷி சில்லார் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டு, வெற்றி மகுடத்தை தட்டிச் சென்றார். அரியானா மாநிலத்தை சேர்ந்த மனுஷி சில்லார்(20) இந்த ஆண்டுக்கான இந்திய அழகியாகவும் தேர்வானார். தற்போது அவர் மருத்துவம் பயின்று வருகிறார் மற்றும் 3வது இடங்களை மிஸ் இங்கிலாந்து ஸ்டெபானி ஹில் மற்றும் மிஸ் மெக்சிகோ ஆண்ட்ரியா மெஜா பிடித்துள்ளனர். 17 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியாவை சேர்ந்த மனுஷி சில்லார் உலக அழகியாக தேர்வாகி இந்தியாவுக்கு பெருமை தேடி தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2000ம் ஆண்டு இறுதியாக இந்தியாவின் பிரியங்கா சோப்ரா இந்த பட்டத்தினை வென்றார். அதற்கு முந்தைய வருடம் யுக்தா முகி வெற்றி பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார்.

1994ம் ஆண்டு ஐஸ்வர்யா ராயும், 1997ம் ஆண்டில் டையானா ஹெய்டனும் இந்த பட்டம் வென்றனர்.

1966ம் ஆண்டு முதன்முதலில் ரீட்டா பரியா உலக அழகி பட்டத்தினை வென்ற இந்தியராவார்

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...