போயஸ் கார்டனில் வருமான வரி சோதனை நிறைவு - ஜெயலலிதா அறையில் சோதனை நடத்த அனுமதி மறுப்பு

நவம்பர் 18: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ் கார்டன் இல்லத்தில் 4 மணி நேரம் நீடித்த வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றது. ஜெயலலிதா அறையில் சோதனை நடத்த, சசிகலா தரப்பினர் அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கவில்லை.

போயஸ் கார்டனில் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தில் நேற்றிரவு வருமான வரித்துறையினர், அதிரடியாக சோதனை நடத்தினர். ஜெயலலிதாவின் வீட்டில் சோதனை நடப்பது குறித்த தகவல் தெரிந்ததும், இரவு 10:30 மணிக்கு ஜெயா டிவி மேனேஜிங் டைரக்டர் விவேக் அங்கு சென்றுள்ளார். சுமார் நான்கு மணி நேரம் இந்த சோதனை நீடித்தது. அதிகாலை சுமார் 2 மணியளவில் சோதனை நிறைவு பெற்றது. இந்நிலையில், ஜெயலலிதா அறையில் சோதனை நடத்த அனுமதிக்கவில்லை என விவேக் தெரிவித்தார்.

சோதனைக்கு பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஜெயலலிதா வாழ்ந்த வீடு கோவில் போன்றது. இங்கு சோதனை நடத்தியது வேதனை அளிக்கிறது. ஜெயலலிதா அறையில் சோதனை நடத்த நாங்கள் அனுமதிக்கவில்லை. சில கடிதங்கள், 2 பென் டிரைவ், ஒரு லேப்டாப்பை அதிகாரிகள் எடுத்து சென்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஜெயலலிதா வாழ்ந்த வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டதற்கு அதிமுக.,வினர் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டுள்ள நிலையில், இன்று (நவ., 18) காலை முதல் போயஸ் கார்டன் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தீவிர சோதனை மற்றும் விசாரணைக்கு பிறகே அப்பகுதியில் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகிறது.

வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டுள்ள நிலையில், திடீரென போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளதால் போயஸ் கார்டன் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...