ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்யாவிடில் தீப்பெட்டி தயாரிப்பு ஆலைகளை மூட முடிவு

நவம்பர் 11: தீப்பெட்டி மீதான 18 சதவீத ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்யாவிட்டால் தீப்பெட்டி தயாரிப்பு ஆலைகளை மூட முடிவு செய்துள்ளதாக அதன் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஒரே வரி என்ற கொள்கையின்படி ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்டது. பெரும்பாலான வணிகர்கள் மற்றும் மக்களிடையே இந்த வரிவிதிப்பு முறை அதிருப்தியை ஏற்படுத்தியது. அவசர கதியில் கொண்டு வரப்பட்ட வரி விதிப்பு என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. இதையடுத்து, ஜி.எஸ்.டி.யில் மாற்றம் கொண்டு வரப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.

இதனிடையே, அசாமில் நடந்த 23-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு பொருட்களின் வரிகளை குறைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஜவுளி மற்றும் ஜவுளி சார்ந்த பொருட்களுக்கான வரி 18 சதவிகிதத்தில் இருந்து 5 ஆக குறைக்கப்பட்டது. விவசாய டிராக்டருக்கான வரி 28 சதவிகிதத்தில் இருந்து 18 ஆக குறைக்கப்பட்டது. இதேபோல, 178 பொருள்களுக்கான ஜி.எஸ்.டி. வரி குறைக்க முடிவு செய்யப்பட்டது.

தற்போது, தீப்பெட்டி மீதான ஜி.எஸ்.டி. வரி 18 சதவிகிதமாக உள்ளது. இந்நிலையில், தீப்பெட்டி மீதான 18 சதவிகித ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்யாவிட்டால் தீப்பெட்டி தயாரிப்பு ஆலைகளை மூடும் சூழல் ஏற்படும் என உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...