டிரம்ப்பின் மகள்வருகை - ஐதராபாத்தில் பிச்சைக்காரர்களுக்குத் தடை

நவம்பர் 9: அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மகளான இவாங்கா டிரம்ப் வருகையையொட்டி, ஐதராபாத்தில் பிச்சை எடுக்கத் தடை விதித்து போலீஸார் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளனர். 

ஐதராபாத் நகரில் வரும் 28 முதல் 30ஆம் தேதி வரை நடக்கும் சர்வதேசத் தொழில்முனைவோர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகள் இவாங்கா டிரம்ப் இந்தியா வருகிறார். இவரது வருகையை ஒட்டி தற்போது முதலே ஐதராபாத் நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், ஐதராபாத் போலீசார் ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதன்படி, அடுத்த ஆண்டு ஜனவரி 7-ம் தேதி வரை ஐதராபாத்தில் இனி பிச்சை எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதற்கு, முன்னர் கடந்த 2000ஆம் ஆண்டு ஐதராபாத்துக்கு முன்னாள் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் வருகை தந்த போதும் பிச்சை எடுப்பது தடை செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...