குப்பையில் வீசப்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள்

உடுமலை, நவம்பர் 8: திருப்பூா் மாவட்டம் உடுமலை அருகே நரசிங்காபுரத்தில் வாக்காளா் அடையாள அட்டைகள் குப்பையில் கிடப்பதை கண்ட பொதுமக்கள் அதிிர்ச்சி அடைந்தனா்.



பொதுமக்கள் வாக்காளா் அட்டைகளை எடுத்து பாா்த்த போது அவை அனைத்தும் துணை முதலமைச்சா் ஓ.பன்னீா்செல்வத்தின் போடிநாயக்கனூா் பகுதியை சார்ந்தவை என தெரியவந்தது.



தேனி மாவட்ட மக்களின் வாக்காளா் அடையாள அட்டை இங்கு எப்படி வந்தது என்று தெரியாமல் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.

மாநிலத்தின் துணை முதலமைச்சா் தொகுதியே இப்படி என்றால் மற்ற தொகுதி வாக்காளா்களின் அடையாள அட்டை என்ன நிலையில் இருக்கும் என்ற கேள்வி பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.



இதுக்குறித்து அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்ததன் பேரில் அந்த வாக்காளா் அட்டைகளை அதிகாரிகள் வாங்கி சென்றனா்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...