சென்னை மாநகராட்சிக்கு இன்று முதல் 650 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம்

நவம்பர் 8: நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணியின் உத்தரவுப்படி, பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளுக்கு இன்று முதல் 650 மில்லியன் லிட்டர் குடிநீர் தினந்தோறும் வழங்கப்படுகிறது.

தமிழக அமைச்சர்கள் டாக்டர்.சி.விஜயபாஸ்கர், டாக்டர்.நிலோஃபர் கபீல், திரு.எஸ்.பி.வேலுமணி ஆகியோர் வடகிழக்கு பருவமழையையொட்டி பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து நேற்று ஆய்வு மேற்கொண்டனர். பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட வேளச்சேரி வி.ஜி.பி. செல்வா நகர், புவனேஸ்வரி நகர், இராம்நகர், மடிப்பாக்கம், சதாசிவம் நகர் ஆகிய பகுதிகளில் மழைநீரை வெளியேற்ற மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டனர்.



தொடர்ந்து, சதுப்பு நிலப்பகுதிகளுக்கு பல்லாவரம், துரைப்பாக்கம் ரேடியல் சாலை-11 பகுதியிலிருந்து குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுவதையும், அதில் ஏற்பட்டிருந்த அடைப்புகளை ஜே.சி.பி. இயந்திரம் மூலம் அகற்றுவதையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். 

அமைச்சர் வேலுமணி ரிப்பன் மாளிகையில் அலுவலர்களுடன் நடந்த ஆய்வுக்கூட்டத்திற்கு பின் தெரிவிக்கையில், பெருநகர சென்னை மாநகரில் 30.10.2017 முதல் 07.11.2017 வரை 47.38 செ.மீ. அளவு கனமழை பதிவாகி உள்ளது. இந்தக் கனமழையினால் மழைநீர் தேங்கிய 269 இடங்களில் 155 மோட்டார் பம்புகள் மூலம் 180 இடங்களில் உடனடியாக அகற்றப்பட்டு, மீதமுள்ள 89 இடங்களில் மழைநீர் அகற்றும் பணி இடைவிடாது நடைபெற்று வருகிறது. அதிகளவு மழைநீர் தேங்கியுள்ள கார்கில் நகர், இராஜாஜி நகர், பெரியார் நகர், விஜிபி செல்வா நகர், புவனேஸ்வரி நகர் போன்ற இடங்களில் 134 மோட்டார் பம்புகள் பயன்பாட்டில் உள்ளன. மழையின் காரணமாக விழுந்த 88 மரங்களும் உடனடியாக அகற்றப்பட்டு போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் வழிவகை செய்யப்பட்டுள்ளது.



மேலும், பொதுமக்களிடமிருந்து பெருநகர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையில் உள்ள கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணான 1913 மூலமும், 044-2536 7823, 2538 4965, 2538 3694 ஆகியவற்றின் வழியாக 6,955 புகார்கள் பெறப்பட்டு, 6,347 புகார்களுக்கு விரைந்து தீர்வு காணப்பட்டுள்ளன. மீதமுள்ள 608 புகார்களுக்குத் தீர்வுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

சென்னை மாநகருக்கு தற்பொழுது விநியோகிக்கப்படும் குடிநீரின் அளவினை கூடுதலாக்கி விநியோகிக்க, வீராணம் ஏரியிலிருந்து நாளொன்றுக்கு 120 மில்லியன் லிட்டர் குடிநீர் எடுக்கப்பட்டு, இன்று முதல் சென்னை மாநகருக்கு 650 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்படும். என்றார். 

அமைச்சரின் இந்த உத்தரவுப்படி, பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளுக்கு இன்று முதல் 650 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...