2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தீர்ப்பு தேதி மீண்டும் ஒத்திவைப்பு

நவம்பர் 7: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் தீர்ப்பு தேதி இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் தேதியினை மீண்டும் ஒத்திவைத்து சிபிஐ சிறப்பு நீதிபதி ஓ.பி.ஷைனி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கி வழங்கியதில் ரூ.1.70 லட்சம் கோடி முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. இதில், முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா மற்றும் திமுக மாநிலங்களவை எம்.பி. கனிமொழி ஆகியோர் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படுகின்றனர்.

தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 6 வருடங்களாக நடைபெற்று வரும் இந்த வழக்கின் தீர்ப்பு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதிகளில் இருந்து மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து, அந்த தேதி இன்று (நவம்பர் 7) அறிவிக்கப்படும் என நீதிபதி அறிவித்திருந்தார்.

இந்நிலையில், சில ஆவணங்களைத் தயார் செய்ய வேண்டி இருப்பதால் தீர்ப்பு தேதி வரும் டிசம்பர் 5-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தீர்ப்புகள் தயார் செய்ய இன்றும் 3 வாரங்கள் தேவைப்படுகிறது என்பதால் தீர்ப்பு தேதி ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதி  ஷைனி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பிரதமர் திரு. நரேந்திர மோடி திங்களன்று திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்தது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது. மேலும், இந்தச் சந்திப்பு 2ஜி ஊழல் வழக்கின் தீர்ப்பைப் பாதிக்கும் என்று அனைத்துத் தரப்பினராலும் விவாதிக்கப்பட்டு வந்த நிலையில் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது அத்திருப்தியை   à®à®±à¯à®ªà®Ÿà¯à®¤à¯à®¤à®¿à®¯à¯à®³à¯à®³à®¤à¯.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...