தொடர் கனமழை எதிரொலி - 6 மாவட்டங்களில் 3-வது நாளாக பள்ளிகளுக்கு விடுமுறை

நவம்பர் 2 : தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சென்னையில் பல இடங்களில் தண்ணீரில் தத்தளித்து வருகிறது. இதனால், 3-வது நாளாக இன்றும் 6 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

வங்க கடலின் மத்திய மேற்கு பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டதன் காரணமாக கடந்த 29-ம் தேதி முதல் தமிழக கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், சென்னையில் பல இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட சென்னை வெள்ளத்தை நினைவுபடுத்தும் விதமாக பல தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளன. இதை வெளியேற்ற முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னையில் நேற்று அறுந்து விழுந்திருந்த மின்சார வயரை மிதித்த இரு சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். சென்னை மற்றும அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், இந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மழைக் காலங்களில் வீடுகளை விட்டு குழந்தைகளை வெளியே அனுப்ப பெற்றோர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். 

இதனிடையே, மேலடுக்கு சுழற்சி,  தற்போது நகர்ந்துள்ளதால் வடதமிழகத்தில் மழை அளவு குறைவும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. ஆனாலும், தென் தமிழகத்தில் மழை கடும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதன் அறிகுறியாக நெல்லை மாவட்டத்தில் பெய்த கன மழை காரணமாக பல சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. 

தொடர் மழையின் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, திருவாரூர் மற்றும் நெல்லை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறையை அறிவித்து அந்தந்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இன்றும் தமிழகத்தில் பரவலாக மழை தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...