நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் தீக்குளித்த 4 பேரும் பலி - அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்


நெல்லையில் கந்துவட்டி கொடுமைக்கு 4 பேர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் விடுத்து உள்ளது.

நெல்லை மாவட்டம் அச்சன்புதூர் அருகில் உள்ள காசி தர்மத்தை சேர்ந்த இசக்கிமுத்து, அவருடைய மனைவி சுப்புலட்சுமி மற்றும் 2 மகள்களுடன் கடந்த திங்கட்கிழமை நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து தீக்குளித்தனர். படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நால்வரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

கந்து வட்டிக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க தவறிய மாவட்ட ஆட்சியர், போலீஸ் அதிகாரிகளை மாற்றக்கோரியும் போராட்டங்கள் நடைபெற்றன.

இந்த நிலையில், கந்துவட்டி கொடுத்தவர்களின் கொடுமை மற்றும் போலீஸ் நடவடிக்கை எடுக்காமை காரணமாக 4 பேர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பதில் அளிக்க கோரி தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் விடுத்து உள்ளது. தமிழக தலைமை செயலாளர், டிஜிபி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி.க்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது, இன்னும் 4 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...