2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கின் தீர்ப்பு தேதி நவம்பர் 7-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கின் தீர்ப்பு தேதி நவம்பர் 7-ம் தேதி வெளியாகும் என சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2ஜி ஸ்பெக்ட்ரம் எனப்படும் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக புகார் கூறப்பட்டது. இதுதொடர்பாக முன்னாள் தொலை தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி மற்றும் சில நிறுவன நிர்வாகிகள் மீது குற்றம்சாட்டப்பட்டது.

2ஜி ஊழல் வழக்கு விசாரணை டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி.ஷைனி முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் தீர்ப்பு தேதி இன்று (அக்.,25) வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், 2ஜி ஊழல் வழக்கின் தீர்ப்பு தேதி வரும் நவம்பர் 7-ம் தேதி வெளியாகும் என சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நீதிபதி ஷைனி கூறுகையில், தீர்ப்புடன் கூடுதல் ஆவணங்களை சேர்க்க வேண்டிய பணிகள் நடப்பதால் தீர்ப்பு தேதி அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே, நவம்பர் 7-ம் தேதி தீர்ப்பு தேதி வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

தீர்ப்பு தேதி இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்ததால் ஆ.ராசா மற்றும் தி.மு.க. எம்.பி. கனிமொழி ஆகியோர் டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்துக்கு வருகை தந்திருந்தனர். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கின் தீர்ப்பு தேதி மூன்றாவது முறையாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, பா.ஜ.க, எம்.பி., சுப்ரமணியசுவாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 2ஜி முறைகேடுகள் தொடர்பான அனைத்து வழக்கிலும் நவம்பர் 7-ல் தீர்ப்பு தேதியை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வெளியிடும். அதனால் அன்றைய தினம், புதிதாக வருபவர்களுக்காக திகார் சிறை எவ்வாறு தூசி தட்டி வைக்கப்படுகிறது என்பதை சரிபார்த்துக் கொள்ளலாம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...