கந்துவட்டி புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - முதலமைச்சர் உத்தரவு

அதிக வட்டி வசூல் குறித்த புகார்கள் மீது உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், அதீத வட்டி வசூலிப்பவர்களிடம் இருந்து மக்களை காப்பாற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். பாதிக்கப்பட்ட மக்கள் எவ்வித அச்சமும் இன்றி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளை அணுகி புகார் அளிக்கலாம். கந்து வட்டி தொடர்பான புகார்கள் மீது மாவட்ட ஆட்சியர்களும், போலீஸ் அதிகாரிகளும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அதிக வட்டி வசூலிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதீத வட்டி வசூல் தடை சட்டம் 2003 ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வட்டிக்கு பணம் பெற்றவர்கள் அதீத வட்டி வசூல் தடை சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் பணம் செலுத்தி நிவாரணம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கந்து வட்டி கொடுமையால் நெல்லையில் கடந்த வாரம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதை அடுத்து, கந்து வட்டிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...