நெல்லையில் கந்துவட்டி கொடுமையில் தீக்குளித்த 4 பேரில் இரு குழந்தைகள் உள்பட 3 பேர் உயிரிழப்பு

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கந்துவட்டி கொடுமையால் தீக்குளித்த 4 பேரில் பெண் மற்றும் 2 குழந்தைகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.



கடையநல்லூர் அருகே உள்ள காசிதர்மம் பகுதியை சேர்ந்தவர் இசக்கிமுத்து(27). அவருக்கு, மனைவி சுப்புலட்சுமி மற்றும் மதுசரண்யா(4), அட்சய பரணிகா (2) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், இசக்கிமுத்து தனது குடும்பத்தினருடன், நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (அக்.,7) தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றனர். இதைக்கண்ட பொதுமக்கள் மற்றும் போலீஸார், நான்கு பேரின் உடலில் பற்றிய தீயை உடனடியாக அணைத்தனர். பின்னர், அவர்கள் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். 

தீக்காயம் அடைந்த 4 பேரும் கவலைக்கிடமான நிலையில், மருத்துவமனையில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இசக்கிமுத்து தனது குடும்பத்துடன் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்தற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் கந்துவட்டி கொடுமை காரணமாக அவர்கள் தீக்குளித்தது தெரியவந்தது. இசக்கி முத்துவின் மனைவி சுப்புலெட்சுமி காசிதர்மம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் கடன் வாங்கி உள்ளார். அதற்கு மாதந்தோறும் பணம் கட்டி வந்துள்ளார்.



இதுவரை கடன் வாங்கிய பெண்ணிடம் வட்டியுடன் சேர்த்து ரூ.2 லட்சத்து 34 ஆயிரம் கொடுத்துள்ளார். ஆனால், அந்த பெண் வட்டி மட்டும் தான் கொடுத்துள்ளதாகவும், அசல் பணத்தை கட்டவில்லை என கூறி பணம் கேட்டுள்ளார்.  இதுகுறித்து இசக்கிமுத்து அச்சன்புதூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆனால் அதன் மீது போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு இசக்கிமுத்து நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடக்கும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 6 முறை மனு கொடுத்திருக்கிறார். அதன் பிறகும் எதிர்தரப்பினர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.

இதனால், மனம் உடைந்த இசக்கிமுத்து இன்று (அக்.,23) தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து குடும்பத்துடன் தீக்குளித்துள்ளார்.



தீக்குளித்த 4 பேருக்கும் பாளையங்கோட்டை மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் சிகிச்சை பலனின்றி சுப்புலெட்சுமி மற்றும் மகள்கள் மதிசாருண்யா, அக்சயா பரணிகா ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கூலித்தொழிலாளியான இசக்கி முத்துவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கந்து வட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்ததில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...