இலங்கைக் கடற்படையினரால் பாம்பன் மீனவர்கள் 7 பேர் கைது

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த பாம்பன் மீனவர்கள் 7 பேரை, இலங்கைக் கடற்படையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பகுதியிலிருந்து 500-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் வெள்ளிக்கிழமை கடலுக்குச் சென்றனர். à®•ச்சத்தீவு மற்றும் தனுஷ்கோடிக்கு இடையே வெள்ளிக்கிழமை இரவு மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் ஒரு படகை சிறைபிடித்தனர். அப்படகில் இருந்த 7 மீனவர்களை கைது செய்து, தலைமன்னார் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த 7 மீனவர்கள் குறித்த விவரம் சனிக்கிழமை தெரியவரும் என, மீன்வளத் துறை அதிகாரி தெரிவித்தார். 

இந்நிலையில், படகுடன் மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, நாட்டுப்படகு மீனவ சங்கத் தலைவர்கள் எஸ்.பி. ராயப்பன் மற்றும் அருள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...