'ஆன் - லைனில்' பட்டாசு : டில்லிவாசிகள் ஆர்வம்

டில்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதிகளில், அக்., 31 வரை, பட்டாசு விற்பதற்கு தடை விதித்து, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளதால், 'ஆன் - லைன்' மூலம், பட்டாசு வாங்கும் முயற்சியில், டில்லி மக்கள் இறங்கி உள்ளனர். 

டில்லியில், காற்றின் மாசைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, டில்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதிகளில், பட்டாசு விற்பனைக்கு, உச்ச நீதிமன்றம், 2016ல், தடை விதித்திருந்தது. சமீபத்தில், இந்த தடையை நீக்கிய உச்ச நீதிமன்றம், நேற்று முன்தினம், அக்., 31 வரை, டில்லியில், பட்டாசுகள் விற்பதற்கு தடை விதிப்பதாக உத்தரவிட்டது.

டில்லியில், 19ல், தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில், பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவில், பட்டாசு வெடிப்பது குறித்து, ஏதும் கூறப்படவில்லை. அதனால், அண்டை மாநிலங்களில் இருந்தும், ஆன் - லைன் மூலமாகவும், பட்டாசு வாங்குவது அதிகரித்துள்ளது.

இது குறித்து, வழக்கறிஞர்கள் கூறியதாவது: உச்ச நீதிமன்ற தீர்ப்பில், பட்டாசு விற்பனை குறித்து மட்டுமே கூறப்பட்டுள்ளது. ஆன் - லைன் மூலமாக வாங்குவதிலும் சிக்கல் உள்ளது. விற்பனை செய்யும் நிறுவனம், பெங்களூரில் செயல்பட்டாலும், விற்பனை செய்யக்கூடிய இடம் டில்லி என்பதால், அதற்கு தடை உள்ளது. அதே போல், டில்லியில் இருந்து செயல்படும், ஆன் - லைன் நிறுவனம், எந்த ஊருக்கும் பட்டாசுகளை விற்பனை செய்ய முடியாது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...