காஷ்மீர் தனி நாடா? பீகார் பள்ளி வினாதாள் கேள்வியால் சர்ச்சை

பாட்னா : பீகாரில் உள்ள பள்ளிகளில் அக்டோபர் 5 ம் தேதி தேர்வு நடந்துள்ளது. இதற்காக மத்திய அரசின் சர்வ ஷிக்சா அபியான் திட்டத்தின் கீழும், பீகார் பள்ளி திட்ட கழகத்தின் கண்காணிப்பிலும் செயல்படும் அமைப்பால் வினாதாள்கள் தயார் செய்யப்பட்டு, பீகாரில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

இதில், 7 ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாளில், கீழ்வரும் 5 நாடுகளில் வசிக்கும் மக்களை எப்படி அழைப்பார்கள் என கேட்கப்பட்டு, சீனா, நேபாளம், இங்கிலாந்து, காஷ்மீர், இந்தியா என குறிப்பிடப்பட்டுள்ளது. காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி அல்ல என்பது போலவும், காஷ்மீர் தனி நாடு என கூறும் வகையிலும் கேட்கப்பட்டுள்ள இந்த கேள்வி புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.

வைஷாலி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவன் இதனை கண்டுபிடித்து நேற்று வெளிப்படுத்தி உள்ளான். இது தொடர்பாக வைஷாலி மாவட்ட கல்வி அதிகாரி சங்கீத் சின்காவிடம் கேட்டதற்கு, நான் விடுமுறையில் இருந்ததால் இது பற்றி எனக்கு தெரியாது. இது விவகாரம் குறித்து விசாரிக்கிறேன் என பதிலளித்துள்ளார்.

பீகார் கல்வி திட்ட கழக அதிகாரி பிரேம் சந்திராவிடம் கேட்டதற்கு, இது அசு்சுப்பிழையாக இருக்கலாம். இது எப்படி நடந்தது என தெரியவில்லை. இது குறித்து விசாரிக்கப்படும் என தெரிவித்துள்ளார். இந்த வினாதாள்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அச்சிடப்பட்டதும் தெரிய வந்துள்ளது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...