தற்கொலை செய்பவர்களில் பெண்களை விட ஆண்கள் அதிகம்

ஐதராபாத் : இந்த ஆண்டு , ஐதராபாத் நகரில் பெண்களை விட ஆண்களே அதிக அளவில் தற்கொலை செய்து கொண்டதாக குற்றவியல் புள்ளி விபரம் தெரிவிக்கிறது.

ஐதராபாத்தில் இந்த ஆண்டு செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் 402 தற்கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்களில் 265 பேர் ஆண்கள். 265 பேரில் 204 பேர் தூக்கு போட்டும், 39 பேர் விஷம் குடித்தும் தற்கொலை செய்து கொண்டனர். 

ஐதராபாத்தில் இந்த ஆண்டு 137 பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர். இவர்கள் 15 பேர் தீக்குளித்தும், 16 பேர் விஷம் குடித்தும் இறந்துள்ளனர். பெண்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு பெரும்பாலும் குடும்ப பிரச்னையே காரணமாக கூறப்படுகிறது.

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், இவர்களின் தற்கொலைக்கு என்ன காரணம் என சரியாக கண்டுபிடிப்பது மிகவும் கடினம். ஆனால் ஆண்கள் அதிக அளவில் தற்கொலை செய்து கொண்டுள்ளதற்கு வேலை பளுவால் ஏற்படும் மனஅழுத்தம் அல்லது கடன் பிரச்னையே காரணமாக உள்ளது என்றார். 

மனநல மருத்துவர்கள் கூறுகையில், பெண்களை விட ஆண்கள் எளிதில் உணர்ச்சி வசப்பட கூடியவர்கள். சில சமயங்களில் இது தற்கொலை வரை கொண்டு சென்று விடுகிறது. பொதுவாக பெண்களே அதிக அளவில் மனஅழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். ஆனால் இதில் ஆண்கள் தங்களின் உணர்வுகளை வெளிக்காட்டுவதில்லை. இதுவே தற்கொலைக்கு காரணமாகி விடுகிறது. இது போன்ற மனஅழுத்தம் கொண்ட ஆண்களை கண்டறிவது மிகவும் கடினம் என்கின்றனர்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...