நாட்டின் வரா கடன் அளவு ரூ.9.53 லட்சம் கோடி

மும்பை : நடப்பு ஆண்டின் ஜூன் மாத இறுதி நிலவரப்படி, நாட்டில் உள்ள வங்கிகளின் வராக் கடன் அளவு ரூ.9.53 லட்சம் கோடி என தகவல் வெளியாகி உள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள ரிசர்வ் வங்கி, இந்த ஆண்டின் ஜூன் இறுதி வரையிலான 6 மாதங்களில் வங்கியில் உள்ள வராக் கடன்களின் அளவு 4.5 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு முந்தைய 6 மாதங்களில் வராக்கடன் அளவு 5.8 சதவீதம் அதிகரித்திருந்தது. இந்தியாவில் கம்பெனிகளுக்கான நிதி, வங்கிகள் மூலமே வழங்கப்பட்டு வருகிறது. இதில் பல நிறுவனங்கள், குறிப்பாக சிறு நிறுவனங்கள் முறையாக கடனை திருப்பிச் செலுத்தாததால், பொருளாதாரத்தில் மிகப் பெரிய தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசுடன், வங்கிகளும் வராக்கடன்களை வசூலிக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கடன்களை திரும்பப் பெறுவதற்காக வட்டி விகிதங்களும் குறைக்கப்பட்டுள்ளன. 

இருந்தும் மாநில வங்கிகளில் அதிக அளவிலான தொகை வராக்கடனாக முடக்கப்பட்டுள்ளதால், புதிய கடன்கள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வங்கிகள் பணப்பற்றாக்குறையை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. வராக்கடனுக்காக 20 க்கும் மேற்பட்ட கம்பெனிகளின் சொத்துக்கள் கோர்ட் அனுமதியுடன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமாக 11 மாநிலங்களில் மட்டும் ரூ.98,000 கோடி வராக் கடனாக உள்ளது. இது போன்று நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் ரூ.9.53 லட்சம் கோடி வரை வராக்கடனாக உள்ளது. இவ்வாறு ரிசர்வ் வங்கி பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...