மதுரை ஆதீன மடத்திற்குள் நுழைய நித்யானந்தாவுக்கு தடை

மதுரை ஆதீன மடத்திற்குள் நுழைய நித்யானந்தாவுக்கு தடைவிதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த ஜெகதலபிரதாபன் தாக்கல் செய்த மனுவில், “சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் நித்யானந்தா தன்னை மதுரை ஆதீன மடத்தின் 293-வது மடாதிபதியாக பிரகடனப்படுத்திக் கொண்டார். நித்யானந்தா ஆதீனமாக நியமனம் செய்வதற்கு தகுதியுடையவர் அல்ல என தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து அவர் மடத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். நித்யானந்தா மடத்துக்குள் நுழைய நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவுகளுக்கு மாறாக, மடத்துக்குள் செல்ல போலீஸ் பாதுகாப்பு கேட்டு நித்யானந்தா வழக்கு தொடர்ந்துள்ளார். மடத்துக்குள் நுழைவதற்கு நித்யானந்தாவுக்கு போலீஸ் அனுமதி வழங்கினால் தேவையில்லாத சர்ச்சைகளும், சட்டம் ஒழுங்கு பிரச்னையும் ஏற்படும். மடத்துக்குள் நுழைய நித்யானந்தாவுக்கு நிரந்தர தடை விதித்து உத்தரவிட வேண்டும்” என குறிப்பிட்டு இருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மதுரை ஆதீன மடத்திற்குள் நித்யானந்தா நுழைய நான்கு வார காலம் இடைக்கால தடைவிதித்து நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, மதுரை ஆதீனம், தலைமைச் செயலாளர், மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...