“18 வயது நிறைவடையாத மனைவியுடன் உறவு கொள்வதும் பாலியல் பலாத்காரமே” -உச்சநீதிமன்றம்

18வயதுக்கு கீழ் உள்ள சிறுமிக்கு திருமணம் ஆகியிருந்தாலும் அவரின் விருப்பமின்றி கணவர் உடலுறவுக்கு கட்டாயப்படுத்தினால் அது பாலியல் பலாத்காரமாக கருதப்படும் என உச்ச நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பளித்துள்ளது.

இது தொடர்பாக, தனியார் தொண்டு நிறுவனம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன் பி லோகுர் மற்றும் தீபக் குப்தா அமர்வு அளித்த தீர்ப்பில், கணவர் கட்டாயப்படுத்தி உடலுறவுக்கு அழைப்பதாக அந்த சிறுமி புகார் அளித்தால் கணவர் மீது வழக்கு பதிவு செய்யலாம் எனவும், அந்த சிறுமியின் ரத்த சொந்தங்கள் புகார் அளித்தாலும் வழக்குப்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் இருந்த அரசியல் சாசன பிரிவு 375ல் கணவருக்கு வழங்கியிருந்த விதிவிலக்கை நீக்கி தீர்ப்பளித்துள்ளது உச்சநீதிமன்றம். 

இந்த தீர்ப்பின் முக்கிய அம்சமாக, 18வயதுக்கு கீழ் உள்ள சிறுமிக்கு திருமணமாகி அவரின் விருப்பத்துடன் கணவர் உடலுறவு வைத்துக் கொண்டாலும் அது பாலியல் பலாத்காரமாகவே கருதப்படும் என உச்ச நீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாடு முழுவதும் இது போன்று 2கோடியே 30லட்சம் திருமணங்கள் நடைபெற்றுள்ளதாகவும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...