இந்திய ராணுவ மேம்பாட்டிற்கு ரூ.10 கோடி வழங்கிய ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி

தனியார் துறையில் மிகவும் பிரபலமான மற்றும் பெரிய வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியானது, அதிகளவிலான பணப் பரிமாற்றம் மற்றும் சொத்துக்களை பாதுகாத்தல் உள்ளிட்டவைகளில் சிறந்து விளங்குகிறது.  இந்த வங்கியானது, கடந்த ஜுன் 30-ம் தேதி வரையில் அமெரிக்காவில் 153 மில்லியன் அளவிற்கு வாடிக்கையாளர்களின் சொத்துக்களை மேலாண்மை செய்து வருகிறது.  தற்போது இந்தியா உள்பட 17 நாடுகளில் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி செயல்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், இந்திய ராணுவத்திற்கு ரூ.10 கோடி ரூபாயை ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்தத் தொகையை இரண்டு கட்டமாக வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தற்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், முதற்கட்டமாக ரூ.5 கோடிக்கான காசோலையை ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் நிர்வாக இயக்குநர் சந்தா கோச்சார் வழங்கினார். 



அப்போது, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் நிர்வாக இயக்குநர் சந்தா கோச்சார் பேசுகையில், நமது இந்திய ராணுவத்தினர் எல்லையில் தைரியமாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணியின் போது, ஒரு சில வீரர்கள் வீரமரணமும் அடைகின்றனர். அவர்களது இறப்பை எத்தனை நிதி கொடுத்தாலும் ஈடுகொடுக்க முடியாது. ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி வழங்கியுள்ள நிதியின் மூலம், உயிரிழந்த ராணுவ வீரர்களின் மகள்களின் ஆதரவுக்காகவும், முன்னாள் ராணுவ வீரர்களின் மனைவிகளை மேற்படிப்பு படிக்க உதவி செய்யப்படும். மேலும், முன்னாள் ராணுவ வீரர்களின் மகள்களின் திருமணங்களும் நடத்த நிதி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...