சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்புக்கு மீண்டும் பொதுத் தேர்வு நடத்தப்படும் - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு

மாநில பாடத்திட்டத்தை போலவே, சி.பி.எஸ்.இ. வழிக்கல்வியிலும் 10-ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்தும் முறை அமலில் இருந்தது. ஆனால், பல்வேறு காரணங்களுக்காக அந்த நடைமுறை கடந்த 2010-ம் ஆண்டில் இருந்து கைவிடப்பட்டது. 

பத்தாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தாமல் இருப்பது சி.பி.எஸ்.இ. கல்வியின் தரத்தை பாதிக்கும் என்றும், நேரடியாக பிளஸ்-2 பொதுத்தேர்வை எதிர்கொள்வது சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு சிரமமாக இருக்கும் என கல்வியாளர்கள் கூறி வந்தனர். 

இந்த நிலையில், ஒடிசா மாநிலம் பூரி மாவட்டத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியளர்களிடம் பேசுகையில், சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்புக்கு மீண்டும் பொதுத் தேர்வு நடத்தப்படும். 5 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் இறுதித் தேர்வில் தோல்வியடைந்தால், அவர்கள் மீண்டும் அதே வகுப்பு பயில வேண்டும்.  தோல்வியடையும் மாணவர்களின் நலன் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

கல்வித்துறையில் மேற்கொண்டுள்ள இது போன்ற திட்டங்களுக்கு 25 மாநில அரசுகள் ஒப்புதல் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...