மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை வரவேற்று ஏர்.ஆர். ரகுமான் பாடல் வெளியீடு

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளான 500 மற்றும் 1000 ரூபாய்களை திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அறிவித்தது. இந்த நடவடிக்கைக்கு, பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்து வந்தாலும், ஒரு சிலர் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை விமர்சனம் செய்து வருகின்றனர். 

இந்த நிலையில் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்து ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் ஒரு பாடலை வெளியிட்டுள்ளார். ”தி ஃப்ளையிங் லோட்டஸ்” (The flying lotus) என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அந்த பாடல் 19 நிமிடங்கள் அடங்கியது. 

இது குறித்து செய்தி நிறுவனத்திற்கு ஏ.ஆர். ரகுமான் பேட்டியளிக்கையில், ”தி ஃப்ளையிங் லோட்டஸ்” மக்களிடையே எழுச்சியை உண்டாக்கும். நான் ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்த போது, பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் எதிர்காலத்தில் நடக்க இருப்பதை விளக்கியுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார். 

இந்த பாடலின் வரிகளை எழுத்தாளர்கள் விஜய், சிதா வாஷி, பாரூல், கேரி ஹவுலகான், விஸ்வா, வந்தனா பிரசாத், நோரீன், கபீர் சஹானி மற்றும் சத்யா, ராவ் ரமலா ஆகியோர் எழுதியுள்ளனர். 

பாடலில் உணர்ச்சிகளை வெளிக் கொண்டும் வரும் விதமாக, பிரதமர் மோடியின் சிறிய உரை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம், பணமில்லா வர்த்தகம், தன்தனாதன் திட்டங்கள் பற்றிய வரிகள் இடம் பெற்றுள்ளன. 

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...