சிக்குன்குனியா நோயை குணப்படுத்த புதிய மருந்து கண்டுபிடிப்பு



சிக்குன்குனியா காய்ச்சலும் நுண்ணியிரிகளினால் பரவும் நோயாகும். நுண்ணியிர்கள் தொற்றிய ஏடிஸ் வகை கொசுக்களால் இந்நோய் பரப்பப்படுகிறது. நுண்ணுயிரிகளைக் கொண்ட கொசுக்கள் கடிக்கும்போது மனிதனுக்கு இந்நோய் உண்டாகிறது. அறிகுறிகள், உடலில் காணப்படும் மாற்றங்கள், ஆய்வகச் சோதனை, பாதிக்கப்பட்ட கொசுக்களால் கடிக்கப்பட்டிருக்கலாம் என்ற சாத்தியக் கூறுகள் ஆகியவற்றால் சிக்குன்குனியா காய்ச்சல் கண்டறியப்படுகிறது. 

சிக்குன்குனியாவுக்கு என்று தனிப்பட்ட மருத்துவம் எதுவும் கண்டறியப்படாமல் இருந்தது. இந்த நிலையில், இந்திய தொழில்நுட்ப கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், சிக்குன்குனியா நோயை குணப்படுத்துவதற்கான புதிய மருந்தை கண்டுபிடித்துள்ளனர். பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு பின்னர், பைப்பராஜென் என்ற மருந்தில் இருந்து இந்த மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து பேசிய உயிர்தொழில்நுட்பத்துறையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஷெய்லி தோமர் பேசுகையில், ஆண்டுதோறும் சிக்குன்குனியா நோயால் ஏராளமானோர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். தற்போது வரை சிக்குன்குனியாவுக்கு என்று தனிப்பட்ட மருத்துவம் எதுவும் இல்லை. அறிகுறிகளைக் கொண்டே நோய்ப் பராமரிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

இந்த நிலையில், சிக்குன்குனியா நோயை குணப்படுத்த பைப்பராஜென் என்ற மருந்தை கண்டுபிடித்துள்ளோம். இந்த பைப்பராஜென் மருந்தானது, மனிதர்களின் வயிற்றில் உள்ள குடற்புழுக்களை அகற்ற பயன்படுத்தப்படுகிறது. தற்போது, இந்த மருந்தை சந்தைகளில் அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக,  மருந்தின் மூலக்கூறுகளை விலங்குகளுக்கு செலுத்தி சோதனை செய்து பார்க்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...