சசிகலாவுக்கு 5 நாள் பரோல் வழங்கியது கர்நாடக சிறைத்துறை



சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு சிறை தண்டனை பெற்ற சசிகலா, அவரது உறவினர்கள், இளவரசி, சுதாகரன் ஆகியோர், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். சசிகலாவின் கணவர், நடராஜன், உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு, இரு தினங்களுக்கு முன், உடல் உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. அவரை பார்க்க பரோல் கேட்டு சிறை அதிகாரிகளிடம், சசிகலா விண்ணப்பித்தார். 

முதலில், முறையான ஆவணங்கள் இல்லை என அவரது மனு நிராகரிக்கப்பட்டது. பின்னர், 2-வது முறையாக, உரிய ஆவணங்களுடன் சசிகலா பரோல் கோரி மனு தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து, கர்நாடக சிறை துறையினர், தமிழக காவல் துறையினரிடம், பரோல் வழங்குவதில் ஆட்சேபனை உள்ளதா என கேட்டனர். தமிழக காவல் துறை சார்பில், ஆட்சேபனையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், சசிகலா பரோல் குறித்து உயர் அதிகாரிகளுடன் சிறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

இதனை தொடர்ந்து சசிகலாவுக்கு 5 நாட்கள் பரோல் சிறை நிர்வாகம் வழங்கியது. சிறை நடைமுறைகளை முடித்து விட்டு வெளியே வரும் அவர் பெங்களூரூவில் இருந்து விமானம் மூலம் மாலை 5 மணியளவில் சென்னை வருகிறார். அவரை அழைத்து வருவதற்காக, தினகரன் தனது ஆதரவாளர்களுடன் நேற்று மாலை, பெங்களூரு புறப்பட்டு சென்றார். சென்னை வரும் சசிகலா, தி.நகரில் உள்ள இளவரசி மகள் கிருஷ்ணப்ரியா வீட்டில் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...