அரசியல் சார்பு இல்லாமல் செயல்படுவேன் - புதிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேட்டி


தமிழகத்தின் 29-வது ஆளுநராக பன்வாரிலால் புரோகித் இன்று (06.10.2017) பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்பு நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது அவர் பேசியதாவது, புதிய ஆளுநராக பதவி ஏற்ற எனக்கு பல்வேறு கடமைகள் உள்ளன. அரசியல் அமைப்பு சட்டத்தை காக்க வேண்டும் என்பது எனது முதல் கடமையாகும். அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுவதில் உறுதியாக இருப்பேன். அரசியல் சார்பின்றி செயல்படுவேன். நிர்வாகத்தின் வெளிப்படை தன்மையை உறுதி செய்ய நடவடிக்கை எடுப்பேன்.

தமிழக அரசின் நிர்வாகத்தில் முழு அளவில் வெளிப்படைத்தன்மை உறுதிபடுத்த வேண்டும். தமிழக அரசின் நிர்வாகம் தெளிவாக செயல்பட உறுதி செய்வேன். தமிழக அரசின் செயல்பாடுகளை பொறுத்து அரசுக்கு எனது ஆதரவு இருக்கும். தமிழகத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பேன். அரசியல் ரீதியாக எந்த ஒரு நடவடிக்கையும் என்னால் எடுக்கப்படாது. இவ்வாறு அவர் கூறினார்.  

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...