தமிழகத்தின் 29-வது ஆளுநராக பதவியேற்றார் பன்வாரிலால் புரோஹித்



தமிழக ஆளுநராக 5 ஆண்டுகள் பணியாற்றிய ரோசய்யாவின் பதவிகாலம் கடந்த ஆண்டு ஆகஸ்டு 30-ந்தேதி முடிவடைந்தது. இதையடுத்து மகாராஷ்டிர மாநில ஆளுநராக இருந்து வரும் வித்யாசாகர் ராவ் தமிழகத்துக்கு பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவர் கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ந்தேதி தமிழக பொறுப்பு ஆளுநர் என்ற கூடுதல் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார். 

இந்த நிலையில், தமிழகத்தில் நிலவி வந்த அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், ஜெயலலிதா மரணம் குறித்த சந்தேகம், அமைச்சர்கள் மீதான ஊழல் புகார், சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்தல் போன்ற பல்வேறு பிரச்சினைகளால் தமிழகத்துக்கு முழு நேர ஆளுநரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இதைத்தொடர்ந்து, அசாம் மாநில ஆளுநராக பணியாற்றிய பன்வாரிலால் புரோகித்தை தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், கடந்த 30-ந்தேதி உத்தரவிட்டார். 

அதன்படி, தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோகித் இன்று (06.10.2017) பதவி ஏற்றுக் கொண்டார். சென்னை கிண்டி ராஜ்பவன் ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்பு விழா நடக்கிறது. விழாவில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கலந்து கொண்டு பன்வாரிலால் புரோகித்துக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் பிற அமைச்சர்கள் கலந்துக் கொண்டனர். 

முதலமைச்சர் பழனிசாமி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். விழாவில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துக் கொண்டார். பா.ஜ.க.வில் இருந்து மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் எம்.பி. இல.கணேசன் ஆகியோர் கலந்துக் கொண்டனர். 

தமிழகத்தின் புதிய ஆளுநராக பதவி ஏற்க உள்ள பன்வாரிலால் புரோகித் மகராஷ்டிர மாநிலம் விதர்பா பகுதியை சேர்ந்தவர். அவருக்கு வயது 77.  எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சர் போன்ற பல்வேறு பதவிகளில் இருந்துள்ளார். தற்போது ‘தி ஹிதாவதா’ என்ற நாளிதழின் உரிமையாளர்-நிர்வாக ஆசிரியராகவும், நாக்பூரில் பொறியியல் கல்லூரி ஒன்றின் தலைவராகவும் இருந்து வருகிறார். இந்திய நாடு சுதந்திரம் அடைந்தபோது தமிழக ஆளுநராக லெப்டினெட் ஜெனரல் சர் ஆர்சிப்பால் எட்வர்ட் நை இருந்தார். அதன் பின்னர் ஆளுநர், பொறுப்பு ஆளுநர்  என்று 28 பேர் தமிழக ஆளுநர்களாக இருந்துள்ளனர். தற்போது தமிழகத்தின் 29-வது ஆளுநராக பன்வாரிலால் புரோகித் பதவி ஏற்று உள்ளார்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...