சிபிஎஸ்இ மாணவர்கள் தேர்வு எழுத ஆதார் எண் கட்டாயம்!

டெல்லி: சிபிஎஸ்இ மாணவர்கள் தேர்வு எழுத ஆதார் எண் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மாநில அரசுகளின் நலத்திட்டங்களை பெற மட்டுமே இதுவரை ஆதார் எண் கட்டாயம் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது சிபிஎஸ்இ மாணவர்கள் தேர்வு எழுத ஆதார் எண் கட்டாயம் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. அதன்படி2017-18 கல்வியாண்டு முதல் தேர்வுகளை எழுத 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களின் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. 

மேலும் சிபிஎஸ்இ அங்கீகாரம் பெற்ற அனைத்து பள்ளிகளும் தங்கள் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆதார் எண் உட்பட அனைத்து ஆவணங்களையும் சிபிஎஸ்இ இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் ஆதார் எண் இல்லாத மாணவர்கள் தங்கள் ஆதார் எண்ணின் பதிவெண்ணை வழங்கலாம் என்றும் சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. 

தேர்வு எழுத முதல்முறையாக ஆதார் தகவல்களை சமர்ப்பிக்க சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...