மும்பை ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 22 பேர் பலி

மும்பை எல்பின்ஸ்டன் ரயில் நிலைய மேம்பாலத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்டம் அதிகமாகவே காணப்படும். குறுகிய நடைமேடை மேம்பாலத்தில் பயணிகள் சென்று கொண்டிருக்கும் போது, மின்சாரம் கசிந்ததாக வதந்தி பரவியது. இதனால், அங்கிருந்து மக்கள் ஓட முயன்றனர்.

நடைமேடை மேம்பாலத்தில் கூட்டம் அதிகரித்திருந்ததால் நெரிசல் ஏற்பட்டுள்ளது. அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சிக்கி மூச்சு திணறி 3 பேர் உயிரிழந்ததாகவும், 20 பேர் காயம் அடைந்து உள்ளனர் எனவும் முதல்கட்ட தகவல்கள் வெளியாகியது.

காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். விபத்து நேரிட்ட பகுதிக்கு ஆம்புலன்ஸ்கள் விரைந்து சென்று உதவியில் ஈடுபட்டது. தீயணைப்பு குழுவும் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மீட்பு பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் பெண்கள் என கூறப்படுகிறது. இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நேரத்தில் இந்த விபத்து நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...