கார்த்தி சிதம்பரம் மீதான லுக் அவுட் நோட்டீஸ் அக்.,4 வரை நீட்டிப்பு - உச்சநீதிமன்றம்

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சிதம்பரத்தின் மகன் கார்த்தி மீது, சி.பி.ஐ., ஊழல் வழக்கு பதிவு செய்தது. வெளிநாட்டைச் சேர்ந்த ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனத்துக்கு மத்திய அரசின் அன்னிய முதலீட்டு வாரியம் 2007ல் அனுமதி அளித்தது. அப்போது மத்திய நிதியமைச்சராக இருந்த சிதம்பரத்தின் உதவியுடன், இந்த அனுமதி கிடைக்க கார்த்தி நடவடிக்கை மேற்கொண்டதாக கடந்த மே 15-ம் தேதி தனது முதல் தகவல் அறிக்கையை சி.பி.ஐ., தாக்கல் செய்தது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு, கார்த்தி ஆஜராகவில்லை. இதையடுத்து கார்த்திகுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து கார்த்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், லுக் அவுட் நோட்டீசுக்கு தடை விதிக்க மறுத்து விட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணை இன்று (22.09.2017) மீண்டும் வந்தது. அப்போது, சி.பி.ஐ., தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கார்த்திகு வெளிநாடுகளில் சொத்து உள்ளதால் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கக்கூடாது என வாதிட்டார். இதனையடுத்து கார்த்தி சிதம்பரம் மீதான லுக் அவுட் நோட்டீசை அக்டோபர் 4 -ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டு, விசாரணையை அன்றைக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...