நீர்நிலைகளை அசுத்தம் செய்தால் சிறை தண்டனை - கேரள அரசு அதிரடி அறிவிப்பு

கேரளாவில் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது. அந்த அரசு தற்போது "ஹரிதா கேரளம்" என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் கேரளாவை தூய்மையாகவும், பசுமையாகவும் வைப்பதே நோக்கமாகும். 

இந்த திட்டத்தை மக்களிடையே கொண்டு சேர்ப்பதற்கு பிரபலங்கள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் கேரள அரசு செய்து வருகிறது. மாநிலத்தை தூய்மையாக வைப்பதற்காக கேரள அரசு மற்றும் சுட்சித்வா மிஷன் அமைப்புடன் கேரள போலீஸாரும் இணைந்து செயல்பட ஒத்துழைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், ”ஹரிதா கேரளம்’’ திட்டம் தொடர்பாக முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் அமைச்சரவை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, மாநிலத்தில் உள்ள நீர்நிலைகளை பாதுகாப்பது என முடிவு செய்யப்பட்டது. இதற்காக, நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டுவதோ அல்லது அசுத்தம் செய்வதோ சட்டப்படி விரோதம் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

மேலும், நீர்நிலைகளை அசுத்தம் செய்பவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சட்டமுன்வடிவு நீர்பாசனத்துறையால் தயார் செய்யப்பட்டு வருகிறது. விரைவில் குளங்கள் பாதுகாப்புத்துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகங்களுடன் கலந்து பேசி சட்டம் கொண்டு வரப்பட உள்ளது. 

கேரள அரசின் இந்த புதிய சட்டத்தால், குப்பைக் குளமாக காட்சியளிக்கும் நீர்நிலைகள் மற்றும் கழிவுகள் கலக்கப்படுவது போன்றவை தடுக்கப்படுகின்றன.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...